Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

இது குடும்ப பெயர், காசியாபுரத்தில் நாங்கள் இந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள்.  இதுபோல் வேறு சில கூட்டங்களும் உண்டு.  எங்கள் கூட்டத்திற்கு குலதெய்வம் கற்கு வேல் அய்யனார்.   ஒவ்வொரு ஆண்டும் கடைசி வெள்ளியன்று கொடை கொடுத்து வந்தவர்கள் இந்த ஆண்டு முதல் வெள்ளியில் கொடை கொடுத்ததாக சொன்னார்.  ஆரம்ப காலத்தில் அப்பா மட்டும் போய் வந்து கொண்டிருந்தார்.   நாங்கள் வளர்ந்த பிறகு போய் வர ஆராம்பித்தோம்.  ஆம் உறவுகளை தெரிந்து கொள்ள.  அங்கு போனபிறகுதான் தெரிந்தது அவரவர் ஒரு இழுக்க ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவாக பிரிந்து இரண்டு கொடை கொடுத்த கதை உண்டு.  தற்போது ஒரு கொடைதான்.

 

அம்மா வழி

எனது தாய் அவர்கள் குடும்பத்தில் ஆறாவது நபர்.  அம்மாவின் பெற்றொர் பெயர் சீனி என்கிற இராமசாமி மற்றும் வள்ளியம்மாள்.  இருவரும் உறவினர்கள்.  ஒரே கிராமம் அதாவது காளத்திமடம்.

இவர்களின் மூத்த மகன் அருணாசலம் – சூரியகனி

இரண்டாவது மகள் அன்னத்தாய்-அருமைக்கிளி

அடுத்து இருவர் குழந்தையிலேயே மரணம்

ஐந்தாவது மாணிக்கம்-ப்ளோரா

அடுத்து எனது தாய்

ஏழாவது குத்தாலிங்கம்-நட்சத்திரம்

எனது தாயை தவிர அனைவரும் நாளது தேதியில் அக்கிராமத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

என்னுடைய தந்தை திரு. ச.வே. அருணாசலம் அவரது குடும்பத்தில் மிகவும் இளையவர்.  அவருடைய தந்தை கூ. பு. சண்முக வேலாயுதம் அவர் வாழ்ந்த கிராமத்தில் ஒரு தலைவர். எனது தந்தையின் தாய் வள்ளியம்மாள் இவர் எங்கள் தத்தாவிற்கு இரண்டாம் தாரம்.    தாத்தாவின் முதல் தாரத்தின் பெயர் பத்ரகாளி அவருக்கு ஒரே மகள் அவர்கள் பெயர் சந்தனமாரி.

எனது அப்பம்மை வள்ளியம்மாளின் ஐந்தாவது மகன் எனது தந்தை.  எனது அப்பம்மைக்கு ஒரு அக்காள் உண்டு அவரது பெயர் தெரியாது.  அவரது மகன் எனக்கு பெரியப்பா அவருக்குஎன்மீது பற்றுதல் உண்டு. அவரின் பெயரும் எனது தந்தையின் பெயரும் ஒன்று

1. திருமலை – அத்தை அவரது கணவர் சீனிவாசன்

2. கூ.ச.வே. சுப்ரமணி – பெரியப்பா அவரது மனைவி செல்லக்கனி

3.கூ.ச.வே. ஜான் பூமணி – பெரியப்பா அவரது மனைவி நீலம்பிகாவதி

4. மாரி – அத்தைஅவரது கணவர் இராமேஸ்வரன்

5. எனது தந்தை ச.வே. அருணாசலம் எனது தாய் சமுத்திரக்கனி

எனது தத்தாவின் தந்தை பெயர்கூ.சு. புதுமாடன் அவருக்கு எனது தத்தாவும் ஒரு மகளும் இருந்தனர்.  அந்த மகள் எனது தாய் வழி தாத்தா குடும்பத்தில் வாக்கப்பட்டுள்ளார்.  அதாவது எனது தாத்தாவிற்கு அவர் பெரியம்மா உறவு

எனது தாத்தாவின் தாத்தா பெயர் சுப்ரமணி.  ஆம் இவரின் பெயரே எனது பெரியப்பாவின் பெயர்.  இதற்கு மேல்தொடர பெயர்கள் தெரியவில்லை.  இதுவே சொத்துடைமையின் பலன்.

மேற்கண்டுள்ளவர்களில் எனது தாயும், பெரியம்மா செல்லக்கனியும் மற்றும் பெரியப்பா அருணாசலம் மட்டுமே தற்போது வாழ்ந்து வருகிறார்கள்.

சூன் மாதம் 12 ஆம் நாள் 1969 ஆண்டு காலை 9.10 மணிக்கு தமிழகத்தின் தென் கோடியிலிருக்கும் காளத்திமடம் எனும் கிராமத்தில் பிறந்தேன்.  அந்த கிராமம் எனது தாய் பிறந்து வளர்ந்த ஊர்.  எனது தந்தை திரு ச.வே. அருணாசலம் அங்கிருந்து 3 கி.மீ தொலைவிலிருக்கும் காசியாபுரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர்.  இவர்களின்  முதல் மகன்